வெறிச்சோடிக் கிடக்கும்
ரயில்வே பளாட்பாரத்தில்
ஒரு கடப்பா கல்லில் கிடக்கிறேன்
பக்கத்துக் கல்லிற்கு வந்து சேர்கிறாள்
ஒரு துப்புரவுத் தொழிலாளி
பேச்சோ, சிரிப்போ ஒன்றுமில்லை
சும்மா படுத்திருக்கிறாள்
ஆயினும்,
என் கால்விரல்களில் சொடக்கு முறிகிறது.
மண்டைக் கொதிப்பு மெல்லத் தணிகிறது
ஓய்ந்திருக்கும் வேளையிலும்
பணி செய்யவே செய்கிறாள்
இந்த இரண்டு கற்களும்
ஒரே கல்லின்
பாதிதான் போலும்
இப்படியே இரு
இப்போதைக்கு எழுந்து விடாதே
மண்டைக் கொதிப்பு மெல்லத் தணிகிறது
ஓய்ந்திருக்கும் வேளையிலும்
பணி செய்யவே செய்கிறாள்
இந்த இரண்டு கற்களும்
ஒரே கல்லின்
பாதிதான் போலும்
இப்படியே இரு
இப்போதைக்கு எழுந்து விடாதே
Comments