தொண்டைக்குழிக்குள் குச்சியைச் செலுத்தி
சளி சேகரித்த அந்தத் தாதி மல்லிகை சூடியிருந்தாள். மல்லிகையின் கீழ் அமர்ந்து பரிசோதனை செய்து கொண்டேன். நான் மருந்துவரைக் காண்பேன். மருந்துகள் எடுத்துக் கொள்வேன். அரசு சொல்லும் அறிவுறுத்தல்களை தவறாது கடைபிடிப்பேன். ஆனால், மல்லிகையே ! நான் உன்னைத்தான் நம்பியுள்ளேன். |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments