உன்னை ஒரு முறை ஆழ முத்தமிட வேண்டும் பாடுகிற போது இருக்கிற உன்னை. பாடுகிற போது இருக்கிற நீ மொத்த உலகிற்கும் முழு எஜமானி. நீ எங்கேயும் கை நீட்டி எதையும் எடுத்துக் கொள்ளலாம். பாடுகிற போது இருக்கிற உன்னை பாடும் போதும் தவிர வேறெப்போதும் பார்க்கவே முடிவதில்லை. பாடும் போது இருக்கிற உன்னை தனியே வடித்தெடுப்பேன். அதில் ஆக்குவேன் ஆயிரம் தெய்வங்களை. |
Comments