Skip to main content

களிநெல்லிக்கனி- ஏற்புரை

நவீனக் கவிதை வாசகர்கள் பலருக்கும் நமது பழந்தமிழ் கவிதைகள் குறித்த வாசிப்பு குறைவுதான். அதற்கு ‘பழையது பயனற்றது ‘என்கிற மேலோட்டமான எண்ணம் முதன்மையான காரணம். நவீன மனிதனின் சிக்கல்களுக்கும் பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் தொடர்பில்லை என்று நினைக்கிறோம். புதிய மனிதனின் புதிய சிக்கல்கள் என்று ஒவ்வொரு காலத்திலும் சில இருந்து வந்துள்ளன. அவை அந்தந்தக் காலத்து கவிதைகளில் பிரதிபலித்தும் வந்துள்ளன. இந்த ஆண்ட்ராய்டு காலத்து மனிதனின் கவிதைகளில் வீடியோ காலும், வாய்ஸ் மேசேஜும் வர வேண்டும். கட்டாயம் வந்தாக வேண்டும். ஒரு புரட்சி போல அல்ல, இயல்பாகவே அவை வந்தாக வேண்டுமல்லவா?

புதிய மனிதனுக்கு சில புதிய சிக்கல்கள் இருப்பது போலவே, ஒரு மனிதனுக்கு என்றென்றைக்குமான சிக்கல்கள் என்று சில உண்டு. பசி, காமம், அச்சம், பொறாமை இப்படி சில. நெருப்பைக் கண்டு பயந்து, வியந்து வணக்கத் தொடங்கிய மனிதன் இன்றுவரை எத்தனையோ விதவிதமான கடவுள்களை வணங்கிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு மீறிய ஒன்றுக்கு அஞ்சுபனாகவும், அதை வணங்கிப் பணிபவனாகவும், அதற்கு நன்றி சொல்பவனாகவும் அவன் எப்போதும் இருந்து வந்துள்ளான். நமது பழந்தமிழ்க் கவிதைகளில் நாம் காண வேண்டியது இதுபோன்ற மனிதனின் என்றென்றைக்குமான சிக்கல்களைத்தான்.

உண்மையைச் சொல்லச் வேண்டுமெனில் இன்றைய புதிய சிக்கல்கள் என்று நாம் கருதுபவை பலதும் அடிப்படைச் சிக்கல்களில் இருந்து பிறந்தவையே. பாலைத் திணை தமிழ்ப்பாடத்தில் 10 மார்க்கு கேள்வியோடு முடிந்துவிடும் ஒன்றல்லா? வாழ்வு தீரும் வரை நமது பாலை தீராது. சங்கக் காட்சிக்கும் நவீனக் காட்சிக்கும் காட்சிகளில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் உணர்வு ஒன்றுதான். 

காதலனோடு சேர்வதற்கு இடையூறாக இருந்த தனது பச்சிளம் குழந்தைகளுக்கு விஷம் வைத்துக் கொல்லத் துணிந்த பெண் ஒருவரை சமீபத்தில் பார்க்கிறோம். “ தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்’ என்கிற தொல்காப்பியத்து பெருந்திணை சூத்திரத்துக்கும் இந்த நவீன யுகத்துக் காட்சிக்கும் தொடர்பிருப்பதாகவே நான் நினைக்கிறேன். சங்கமரபு சொல்லும் “இற்செறித்த”லுக்கும் இன்றைய ஆணவப் படுகொலைகளுக்கும் எளிமையாகவே ஒரு கோடிழுத்துப் பார்த்துக் கொள்ள முடியும்.

அடுத்த காரணம் பழமையின் மேல் உள்ள அச்சம் என்று நினைக்கின்றேன். . அது மிகக்கடினமானது. நமக்கு விளங்காது என்று நம்புகிறோம். அல்லது அவ்வளவு உழைத்துக் கற்க நாம் விரும்புவதில்லை. அது கடினமானது என்று உறுதியாக நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு அது இனிப்பானதும்தான் என்று காட்டுவதே என் எழுத்தின் நோக்கமாக உள்ளது. 

தமிழ்க்கவிதை வரலாற்றில் ஒரு பருவம் வெறும் சந்த விளையாட்டுகளால் நிறைந்து விட்டது. வெற்று செய்யுள்கள் கவிதையின் தீவிரத்தை அழித்தொழிக்க முயன்றன. அதனால் கவிதைக்குள் ‘ இசை” ( musicality) என்கிற விசயத்தின் மீது நமக்கு கடும் வெறுப்பே ஏற்பட்டுவிட்டது. அதனால் தமிழ்க்கவிதை இசையின் இனிமையை இழந்து , முரட்டு உரைநடையின் பக்கம் செல்ல நேர்ந்தது. நவீனக் கவிதை அதன் தீவிரத்தை இழக்காமலேயே பழந்தமிழ் கவிதைகளிலிருந்து அந்த இசையினிமை மீட்க முடியும். .அதற்கு இது போன்ற நூல்கள் உதவக்கூடும்.. 

ஒரே மொழியில் மூன்றாயிரம் வருட இடைவெளியில் தோன்றிய இரு கவிகள் என்கிற அடிப்படையில் எனக்கும் ஒளவைக்குமான தொடர்பு குறித்து இந்த நூலின் முன்னுரையில் பேசியுள்ளேன். 

தவிர, சங்க இலக்கியம் போன்ற ஒரு பெரும் திரட்டை கற்கும் வழிகளில் ஒன்றாக இது போன்ற சிறுநூல்கள் திகழ வேண்டும் என்று விரும்புகிறேன். ஏற்கனவே நவீன இலக்கிய புலத்திலிருந்து நாஞ்சில்நாடன், பெருமாள்முருகன், ஜெயமோகன் போன்றோர் இது போன்ற நூல்களை எழுதியுள்ளார்கள்.

கபிலருக்கும் இது போன்று ஒரு கவித்துவத் திரட்டு வர வேண்டும் என்பது என் விருப்பம். இன்னொரு நவீனக்கவி அதைச் செய்யட்டும்!

நூலை வெளியிட்ட கவிஞர் மோகனரங்கனுக்கும், பெற்றுக் கொண்ட இயக்குநர் பிரசாத் முருகேசனுக்கும் , காலச்சுவடு பதிப்பகத்திற்கும் என் நன்றிகள்!!

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான