விரைவில் ஒரு காபியில் சந்திக்கலாம் என்று சொன்னாய்
அதையே திரும்ப திரும்பச் சொன்னாய் காபியென்றால் அது காபியில்லை என்பதில் உனக்கு அசைக்க மாட்டாத உறுதி ஆகவே முதல் முறை சொன்ன அதே தாளத்தில் முதல் முறை என்பது போலவே இன்று மறுபடியும் சொல்கிறாய் "விரைவில் ஒரு காபியில் சந்திக்கலாம்..." எத்தியோபிய ஆடு மேயாத பழங்களின் உள்ளே ஒளிந்திருக்கும் கொட்டைகளில் ஆழ்ந்து உறங்கிக் கிடக்கிறது நமது காபி. |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments