எதையும் மறந்துவிடவில்லை அல்லவா? புறப்பட்டுப் போகப் போகிறது மே ஃப்ளவர் * ஒரே ஒரு சின்னச் சிக்கல் இல்லாமல் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும் நீ அதில் சிக்கல் என்னவெனில் நீ இருப்பது * வெஞ்சரம் நஞ்சில் புரட்டிய அம்பால் இதயத்தின் ஆழத்தைக் குடைவது வெகு எளிது உனக்கு ‘நீ’ யிலிருந்து ‘ நீங்களு’க்காய் ஒரு நொடிப் பொழுதின் சாகசம் * பார்க்கப் பார்க்க உன் ஈரக்கூந்தலை அடித்து உதறியதில் தெறித்த திவலைகளென வெளி முழுக்கச் சிவந்து நிற்கிறது மே ஃப்ளவர் ஜுன் வந்து கொண்டிருக்கிறது * நன்றி அகழ்! https://akazhonline.com/?p=10173 |
Comments