என் இடது கை உனது வலது கையுடன் பிணைந்துள்ளது இது காரா? அல்லது கன்றுக்குட்டியா? தமிழக அரசால் வழங்கப்பட்ட எண் பலகைகள் முன்னும் பின்னும் ஒட்டப்பட்டுள்ளன ஆனால், வாகனம் இப்போது தமிழக அரசின் கீழ் இல்லை எந்த அரசின் கீழும் இல்லை. நமது கடிகாரங்களை காற்று அடித்துப் போய்விட்டது இந்த வாகனம் ஒரு போதும் வழி தவற வாய்ப்பில்லை ஏனெனில் இதற்கு வழி என்றே ஒன்றில்லை அக்கறையில் கலந்த எரிச்சலோடு கேட்கிறாள் கூகுள் அக்கா.. “எங்குதான் போகிறீர்கள் ?!” “தெரியவில்லை அக்கா..” |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments