Skip to main content

Posts

குட்டி குட்டியாக சில பிரமாதமான வாழ்க்கைகள்

” இந்த வாழ்வு தாறுமாறான பீட்டில் பாடப்படும் மோசமான பாடல் ” என்று சொல்வார் சின்னதங்கம் பீட்ட்ர்ஸன். அதனால் தான் அதற்குள் குட்டி குட்டியாக சில பிரமாதமான பாடல்கள். ஒரு பாடல் என்னையும் என் வாகனத்தையும் ஓட்டிச் செல்கிறது.. ஒரு நாள், அது சைக்கிள் சிறுவர்கள் கையசைத்து கடந்து செல்கிற PBS வாகனம். பெருநகர சாலையின் வெள்ளைக் கோட்டிற்கு இப்புறம் கருங்குயில்கள் பறந்து திரியும் நந்தவனம்... மறு நாள், அது பித்தம் முற்றிய ஒரு மேற்கத்தியனுடையது. ஹாரனின் ஊளையை இன்னொரு கருவியிசையாக்கிக் கொண்டு நூலிடைச்சந்துகளில் புகுந்து வளைந்து களிபீடித்தாடுவது... ஒரு பாடல் என்னையும் என் வாகனத்தையும் ஓட்டிச் செல்கிறது... நானும் ஆண்ட்ரியாவும் கடவுளாகிக் கொண்டிருக்கையில் குறுக்கிட்டதொரு பெரிய டேங்கர் லாரி மண்டை உடைந்து இரத்தம் வழிகிறது ஆனந்தம்.. பரமானந்தம்.. ( ஜான் சுந்தருக்கு..)

என் பொறாமையை அவிழ்த்து விடப் போகிறேன்

என் மொறாமையை அவிழ்த்து விடப் போகிறேன் அது கன்னங்கரு குகையில் அலைந்து திரியும் கன்னங்கரு மிருகம். வன்மத்தின் கொள்ளி மின்னுகிற கண்கள் அதன் உருவம். இந்த உலகத்தின் ஒவ்வொரு புன்னகையும் அதன் கொள்ளியில் வாய்வைத்து ஊதுகிறது. சொர்க்கபுரியின் கூச்சல்களை சதா உன்னித்திருக்குமது அதை சகிக்கவொண்ணாத தருணத்தில் ஒரு இடியை உறுமுகிறது. கடவுள் அந்தரத்தில் மறைகின்ற மாமிச துண்டங்களை அதற்கு வீசியெறிந்தார். எனவே அது பக்கத்து தட்டை பார்க்க வேண்டி வந்தது அழுகையில் ஊறி நைந்த இரவுகளில் இருந்து திசைதெறிக்க ஓடி வருமதன் குறுக்கே நீதியை முழங்கும் கனவானை அது வாயைதிறவாமலேயே மென்று விடுகிறது.

கடைசியாக பார்க்கையில்

கடைசியாக பார்க்கையில் அவனும் இளையராஜாவும் மொட்டை மாடிக்கு போய்க் கொண்டிருந்தார்கள் அத்தனை நட்சத்திரத்திலும் ஒரு நட்சத்திரம் தனித்து ஜொலித்துக் கொண்டிருந்தது. அருகில் பெரிய பூவரசம் நிற்கிறது சின்ன காற்று ... அந்த நட்சத்திரமும் பூவரசமும் ஒரு தபெலாவும் சேர்ந்தடித்த காற்று.. அவன் கிழத்தி எத்தனை நேரமாய் அவனை சாப்பிட அழைத்துக் கொண்டிருப்பாள் மேலே வந்து பார்த்த போது ஒரு கோழிப் பொங்கு வானத்தில் போய்க் கொண்டிருந்தது.

வானம் - நீலம்

வானம் சிக்னலில் சிக்கிக் கொண்டது. ஒரு பிச்சைக்கார சிறுமி அதை நெருங்கி வந்து பிச்சை கேட்கிறாள். வானம் சிவப்பு விளக்கை வெறித்துக் கொண்டு நிற்கிறது. அவள் தொட்டு தொட்டு நச்சரிக்க எரிச்சலில் ஃபேண்ட் பாக்கெட்டில் திணித்திருந்த பர்ஸை எடுத்து அதில் சில்லரைகளைத் தேடியது. அவை எங்கோ இடுக்கில் சிக்கிக்கொண்டிருந்தன. எனவே வானம் பர்ஸை ஒரு குலுக்கு குலுக்கியது அப்போது உள்ளிருந்து தெறித்து விழுந்தது ஒரு யோனி. கடவுள் கிருபையால் சிக்னல் எடுக்க இன்னும் பத்து வினாடிகள் இருந்தன. பதறித் துடித்த அது ஐந்து வினாடிகளுக்குள் தவறவிட்டதை கைப்பற்றி விட்டது. அருகிருந்த பேக்கரியில் தண்ணீர் பாட்டில் வாங்கி அதை நன்றாக அலசி தன் கர்ச்சீப்பால் துடைத்து உலர்த்தி மீண்டும் பர்ஸில் பத்திரப் படுத்திக் கொண்டு கிளம்பியது. நீலம் வழக்கமாக போகும் பேருந்தில் இன்று கூட்டம் அதிகம். நிற்க கூட இடம் இல்லை. எனவே அது ஒற்றைக் காலில் பயணித்தது. உணவு இடைவேளையில் பையை திறந்து பார்த்தால் சாம்பார் டப்பாவும், தயிர் கிண்ணமும் கழன்று பை முழுக்க சிந்தியிருந்தது. அதன் ஈரமும் நாற்றமும் அதற்கு எரிச்சலூட்டியது. அது அவசர அவசரமாக பையில் இருந்த பொருட்களை எட...

குடும்ப நாய் ; சில சித்திரங்கள்

1. ஒரு குடும்ப நாய் குடும்பத்தைத் தின்று குடும்பத்தை பேண்டு அதையே தின்று அதையே பேழ்வது. 2. உண்மையில் குடும்பநாய்களுக்கு சங்கிலியோ கயிரோ தேவையில்லை. 3 . குடும்ப நாய்களை நாம் பரிசோதிக்க வேண்டியதில்லை. அவை சிச்சயம் நல்ல சாதி நாய்கள் 4 உலைத்து உலைத்து ஓடாய் தேய்பவை குடும்ப நாய்கள். பெரும்பாலும் அதன் உலைப்பு காற்றில் போய்விடுகிறது. 5. குடும்ப நாய்கள் சமயங்களில் திருட்டு பூனைகள். 6. குடும்ப நாய்களுக்கு விசாலமான வீடுகள் உண்டு. என்றாலும் அவை அசுத்தமான விடுதிகளிலேயே சுத்தமான காற்று கிடைப்பதாக சொல்கின்றன. எனவே சில நேரங்களில் சொந்த ஊரிலேயே அறை எடுத்து தங்குகின்றன. 7. குடும்ப நாய்களிலும் பெட்டைகள் இன்னும் பாவம் அவை பாத்ரூம்களில் மட்டும் நடனமாட அனுமதிக்க பட்டவை 8. குடும்ப நாயின் கர்ப்பக்குட்டிகளின் வயிற்றில் வளர்ந்து வருகிறது சலாமிடுதல் என்கிற பட்டறிவு. 9. குடும்ப நாய்கள் ரொம்பவும் மனசாட்சிக்கு பயந்தவை. எனவே எல்லா அநீதிகளுக்கெதிராகவும் அவை இரண்டு முறை குரைத்து விடுகின்றன. 10. ஒரு குடும்ப நாய் தன் வாழ்வில் ஒரு முறையேனும் தண்டவாளத்தை உற்ற...

நிலா ரசிகன் கவிதை

இலை அங்குமிங்கும் அலைவுறும் இலையின் பின் ஓடுகிறாள் சிறுமி கைகளில் அகப்படாத இலையை முயல்போல் தாவித்தாவி பின் தொடர்கிறாள். மாபெரும் விருட்சங்கள் தலைகுனிந்து அவளோட்டத்தை ரசிக்கின்றன. வெண்காகங்கள் அவளுடன் நீந்திக்கொண்டு இலையை தொடர்கின்றன. பச்சை இலையின் நரம்புகளை தீண்ட விரல் நீட்டுகையில் ருதுவாகிறாள். அசைவற்று கிடக்கிறது இலை.

விகடகவி மட்டையை உயர்த்துகிறார்

முதன்முதலாக நான் செருப்படி வாங்கியபோது வானத்தில் போன பறவைகள் அப்படியே நின்றுவிட்டன. கடலில் எழும்பிய அலைகள் அந்தரத்தில் ஸ்தம்பித்துவிட்டன அசையும் பொருளெல்லால் ஒரு நாழிகை அப்படியே நின்றுவிட்டன இரண்டாவது முறையாக செருப்படி வாங்கியபோது பறவைகள் அது பாட்டுக்கு பறந்தன அலைகள் அது பாட்டுக்கு அடித்தன செருப்படி வாங்குவதற்காக படைக்கப் பட்டவர்கள் கடவுளின் தரவரிசைப் புத்தகத்தில் கடைசியில் இருக்கிறார்கள் செருப்படி வாங்கிக்கொண்டு கவிதை எழுதுபர்கள் அதற்கும் கொஞ்சூண்டு மேலா அல்லது கடைசிக்கும் கடைசியா என்றெனக்குத் தெரியவில்லை எல்லோரும் என்னை ஒரு விகடகவி என்பதால் நான் எல்லாவற்றையும் விளையாட்டாக்கி காட்ட வேண்டி உள்ளது. எனவே 100 வது செருப்படியின் போது இந்த உலத்திற்கு முன்னால் நான் ஒரு மட்டையை உயர்த்திக் காட்டினேன் ஆனால் 101 வது செருப்படி ரொம்பவும் வலுவாக நடு மொகரையில் விழுந்தது. நான் ஒரு விகடகவியாதலால் வாயை இளிப்பிற்கு கொண்டு வர முயன்றேன் அதற்குள் கண்ணிரண்டும் கலங்கி விட்டன