அதிகாலைத் தேநீரோடு வழக்கத்திற்கு மாறாய் இரண்டு பட்டர் பிஸ்கட்டுகள் சொன்னேன். அதிகாலையிலேயே அதனோடு சேர்ந்து நீயும் வந்துவிட்டாய். கொட்டிக் கவிழ்க்கப்பட்டிருந்த விதவிதமான பதார்த்தங்களுள் அன்று நீ ஏன் பட்டர்பிஸ்கட்டைத் தேர்ந்தெடுத்தாய்? அவ்வளவு பண்டங்களுக்கிடையே பட்டர் பிஸ்கட் ஜெயித்துவிடுமென்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதோ இன்று நானும் இந்த பிஸ்கட்டுகளுமாக எஞ்சியிருக்கிறோம். நானும் எழுந்த போன பிறகு எஞ்சியிருக்கும் சில பட்டர் பிஸ்கட்டுகள். அவை இங்கு எவ்வளவோ காலமாய் வாழ்ந்து வருகின்றன. எத்தனையோ பேர்களை வாழ்விக்கின்றன. |
Comments