ஏதோ ஒரு தூரதேசம்… புல்வெளிப்பரப்பின் பின்னணியில் நின்று கொண்டு பாடிக்கொண்டிருக்கிறான் ஒரு பாடகன். மேலே மழைக்கருப்பின் ரம்மியத்தில் பூத்திருக்கிறது வானம். அப்போது அந்நிலக்காட்சியை ஊடறுத்துப் பறந்ததொரு கொக்கு ஐயோ…! அது அவன் பாட்டையே தூக்கிக்கொண்டு பறக்கிறது. பாட்டு பறக்க அவனும் பறந்தான். அவனோடு பறந்தன பச்சையும் கருப்பும். பார்த்திருந்த நானும் பறந்தேன் சேர்ந்து. |
Comments