மொட்டைமாடியை மூன்று வட்டம் அடித்த அந்த அணில்குட்டி கைப்பிடிச்சுவர்களில் குறுக்குமறுக்குமாக ஓடி அடுத்தவீட்டு ஆஸ்பெட்டாஸில் துள்ளிக் குதித்து காம்பவுண்டு சுவரில் ரோஜா செடிகளில் ஆட்டமாடி பக்கத்தில் நின்றிருந்த தீக்கொன்றையில் ஓடோடி உச்சிக்கிளையேகியது. அங்கிருந்து அருகிருக்கும் மின் கம்பத்திற்கு அந்தரத்தில் தாவுகிறேன் நான். |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments