கீதா பேக்கரியின் விசாலமான முற்றத்தில் நின்றுகொண்டு தன்னந்தனியாக அண்ணாந்து வான் நோக்குகிறேன் அதில் பொங்கி வழிகிறது பிறைமதி இவ்வளவு தேசங்களுக்கிடையே இவ்வளவு ஊர்களுக்கிடையே இத்தனை இத்தனை கல்லுக்கும், மண்ணுக்குமிடையே கடல்களுக்கும், மலைகளுக்குமிடையே ஒரு விநாடி கீதா பேக்கரி முற்றத்தைக் கண்டுவிட்டது நிலவு. அது நலமா? என்றது. நான் நலமே! என்றேன். |
Comments