காதல் நிரம்பி வழிவதிலிருந்து துவங்குகிறது நீயோ கவனம், கவனம் என்று பதறுகிறாய் காதலின் பசியது காயசண்டிகை நீயோ போதும், போதும் என்று மறுதலிக்கிறாய் ஒளிந்து கொள்ளும் அளவு சிறுத்தது உறுதியினும் உறுதியாக காதல் அல்லடி கண்ணே லூசுப் பெண்ணே! இன்ஞ் டேப்பிற்கும் காதலுக்கும் என்னடீ உறவு? காதலை ஆகாய மட்டத்திலிருந்துதான் அளக்கத் துவங்க வேண்டும் அன்பே! |
Comments