நறுமணம் கொண்ட விசாலமான படுக்கை நட்சத்திர விடுதியின் விசாலமான அறையைத் திறந்து காட்டிய பணியாள் "நன்றி!" என்று சொல்லிவிட்டு நகர்கிறான். நான் உடைந்து அழுகிறேன் * கசப்பின் குஷன் நான் மீண்டும் கசப்பிற்குத் திரும்பினேன். மகனைப் போருக்கு அனுப்பி விட்ட தாய் போல அது வாசலிலேயே நின்று கொண்டிருந்தது கசப்பு ஒரு செளகர்யம் ஆதுரம் மேலும் அது எனக்கு நன்கு பரிச்சயமானது அதில் பரபரப்பில்லை. பதற்றமில்லை சாகசங்களில் வெறி மூண்ட வேட்டையாள் ஒருவன் துப்பாக்கியை இறக்கி வைத்து விட்டு இப்போது புளியமரத்தடியொன்றில் தலை சாய்த்துக் கிடக்கிறான் கசப்பில் கசப்பைத் தவிர வேறு ஒன்றுமேயில்லை முக்கியமாக இனிப்பில் இருக்கிற "உள்ளே என்ன இருக்கிறதோ?" என்கிற வெடிகுண்டில்லை * எல்லாவற்றிற்கும் நன்றி! காதலர் வெடித்துச் சினக்கின்றனர். கண்ணீர் வடிக்கின்றனர். பிரிவே உத்தமம் என்று உறுதி பூண்கின்றனர் "எல்லாவற்றிற்கும் நன்றி!" என்றவர்கள் பரஸ்பரம் செய்தி அனுப்பிக் கொள்கையில் "எதுவுமே இன்னும் முடியவில்லை" என்று எங்கிருந்தோ ஒலிக்கும் ஒரு குரல்... அது யாருடைய குரல் |
“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக் கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும் நாலு முக்கில் வைத்து பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக் கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.

Comments