அவளுக்கு மொத்தம் மூன்று வாய்கள் அணிலோடித் திரியும் முற்றத்தில் நின்றுகொண்டு வேடிக்கை காட்டியபடியே பிள்ளைகளுக்கு உணவூட்டுவாள் சேலைத் தலைப்பை பிடித்தபடி கால்களையே சுற்றிச் சுற்றிக் குழையும் ஒன்று. இன்னொன்று இடுப்பில் அமர்ந்திருக்கும். இருவருக்கும் மாறி மாறி ஊட்டுவாள் யாரோ ஒருவர் முரண்டுபிடித்து சிணுங்குகையில் "அணிலுக்கு ஊட்டி விடுவேன்" என்று மிரட்டுவாள். நாளடைவில் ஓட்டங்களிலிருந்து ஆசுவாசத்திற்குத் திரும்பியது அணில். மெல்ல மெல்ல அச்சத்திலிருந்தும் சந்தேகத்திலிருந்தும் கீழிறங்கி வந்தது அது. மெல்ல மெல்ல மேலெழும்பி வந்தாள் அன்னை. இன்று கொஞ்சம் அமுதெடுத்து அணிலுக்கு ஊட்டினாள் பேரன்னை. அப்போது அவளுக்கு அளவிறந்த வாய்கள். நன்றி: ஏழிலைப்பாலை PC Sandhya Pallissery |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments