Skip to main content

புதிது

 


ந்தநாள் ரொம்பவே சலித்துவிட்டது.

பல்லாண்டுகள் தொடர்பற்றுப் போன

பழைய நண்பர் ஒருவரை போனில் அழைத்தேன்.

நண்பர் 15 விநாடிகளுக்குள் சலித்துவிட்டார்.

அவரது பின்னணியில்

இதுவரை கேட்டறியாத

குருவியொன்று கீச்சிட்டுக் கொண்டிருந்தது.

நானும் அதுவும் உரையாடத் துவங்கிவிட்டோம்.

அதன் ஒவ்வொரு பாடலுக்கும்

என் தலைக்கு மேலே

கிளைகள் தழைத்து

மரமாகி மலராகி

வனமொன்று  அடர்ந்து வந்தது.

மறுமுனையில் நெடு நேரம்

பேச்சற்று இருப்பதை உணர்ந்த

பழைய நண்பர்

சற்றே உரக்கக் கத்தினார்..

“கேட்கிறதா...?”

“கேட்கிறதா...?”

“நன்றாகக் கேட்கிறது” என்றேன்.



Comments

Cipher Gypsy said…
அடுத்தவருக்கு பாடல் கேட்கவில்லை, பாவம்.

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை