Skip to main content

Posts

நீலிக்கோணாம்பாளையத்தின் பீக்காடு

இன்று அதிகாலை பீக்காட்டுக்கு போனபோது ஒரு டாங்கியைப் பார்த்தேன். ஆமாம் அதன் பெயர் டாங்கி தான் பீரங்கி அல்ல. பச்சை இலையும் காயந்த சருகும் சேர்ந்திருக்கும் உடுப்பில் அதில் இருவர் அமர்ந்திருந்தனர். இலங்கையில் போர் நடப்பது எனக்கு தெரியும். டி.வி யில் காட்டுகிறார்கள். இந்தக் காட்டை மறைத்து நிற்கும் கொட்டாயில் நான் நிறைய சண்டைகளைப் பார்த்திருக்கிறேன். கடைசி சீனில் "டுமீல்" "டுமீல்" என்று துப்பாக்கிகள் வெடித்திருக்கின்றன. எதையோ வாயில் கடித்துத் துப்பிவிட்டு குண்டுகளை வீசுவார்கள். நிலம் பிளந்து மண் எழும்பும். ஒரு மனிதன் அந்தரத்தில் வெடித்து சிதறுகையில் நாங்கள் சீக்கி அடித்திருக்கிறோம். அந்த கொட்டாய்க்கு பின்னால் தான் இன்று நீட்டிய குழலோடு ஒரு டாங்கி நிற்கிறது. எனக்கு தெரியும் சினிமாவில் எல்லாமே டூப்பு தான். ஆனால், நீலிக்கோணாம்பாளையத்தின் பீக்காட்டுக்குளிருந்து ஒரு டாங்கி உருண்டு வருவதென்றால் இது கனவு தானே நண்பர்களே.... கனவு தானே.. கனவு தான். ஒரு வேட்டு போட்டால் ஓடி விடாதா இந்த வன விலங்கு. ஆனால் இது கனவு தானே? கனவு தானே.. நண்பர்களே இது கனவு தானே.. கனவு தான். ஆறுமுகம் எதிர...

தூரன் குணா கவிதை

மிருகத்தின் ஆன்மாவை மேவுதல் நான் குறைந்தபட்சம் ஒரு மனிதன் பழுப்பு வண்ணத்தை அடைந்துவிட்ட என் கண்கள் இந்த உலகின் புராதன நீதிகளை தொழுகிறது ஆனால் அதன் நீரடியில் வெளியே கேட்காமலே அடங்குவது ஒரு கலகக்குரல்… நான் தொழும் தெய்வத்திற்கோ இந்த உலகின் சம நிலையை காக்க வேண்டிய கடமையிருக்கிறது தெய்வத்திற்கும் எனக்குமான சமர் ஒரு இருதயத்தின் தசை அளவைக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது அப்போது எனது கண்ணீர்த்துளிகள் விலையுயர்ந்தவை…. தெய்வம் பிதற்றும் நீதியை முழுக்கவும் கண்ணீர்த் துளிகள் மறுக்கின்றன தெய்வங்கள் சிலைக்குள் வசிக்காத காலத்தில் தெய்வத்திற்கு எதிரான சங்கீதம் ஒலிக்கிறது அப்போது ஒரு மிருகம் தெய்வத்தின் ஆன்மாவை மேவுகிறது நான் மிருகத்தின் ஆன்மாவை மேவுகிறேன் அக்கணம் வரலாற்றில் தட்டையாகவிருந்தது எனபது கடந்தகாலம்.

சிட்டுக்குருவிகள் வேகமாக அழிந்துவருகின்றன

ஒரு அடைமழை நாளில் சிட்டுக்குருவியொன்றை சந்தித்தேன். தொப்பர நனைந்திருந்த அது ஒரு மரக்கிளையின் இலைமறைவில் அமர்ந்து நடுநடுங்கிக்கொண்டிருந்தது. உடைந்த அதன் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. சிட்டுக்குருவிகள் வேகமாக அழிந்து வருகிற இந்த நாட்களில் அது எங்கிருந்து வந்ததெனத் தெரியவில்லை. மருண்ட விழிகளோடு இறகுக்குள் ஒடுங்கி உயிர் பதற அம்ர்ந்திருந்த அது, ஒருமுறை வலிய பூட்ஸ்காலின் கீழே சுருண்டு கதறிய நான்தான். தானிய மணிகளைக் கொத்திக்கொண்டு கவண்கற்களுக்கு தப்பிப்பறந்த சாகஸத்தின் பழங்கதையை அது மறக்கவே விரும்புகிறது. நிசப்தமான மனிதர்கள் வாழும் நிசப்தமான உலகில் கீச்சுமூச்சு கூடாதென்பதை உடைந்த மூக்கு அதற்கு தெரிவித்துவிட்டது மழை குறைந்து நின்றதும் அது கிளப்பிப்போனது. அதன் இறக்கைகள் எதிலும் காயங்களில்லை. கால்கள் எதுவும் முடமாகவில்லை. என்றாலும் அது மெல்ல மெல்ல நடந்து போனது. அப்போது சிட்டுகுருவி என்ற பெயர் அதை விட்டுவிட்டு பறந்துபோனது.

அப்போது அந்தமுகத்தில் ஒரு சிரிப்பிருந்தது.விழிக்கடையில் கொஞ்சம் நீர் சேர்ந்திருந்தது

ராமகிருஷ்ணன் தான் பிறப்பதற்கு முன்பே அவர் தாயை ஆயிரம் முறைக்கும் அதிகமாக அரசமரத்தை சுற்ற வைத்தார். அம்மன் சன்னிதிகளில் அவள் உருண்டு உருண்டு மண்ணானாள். நாளெல்லாம் விரதமிருந்தாள். இப்படி வாராது வந்த மாணிக்கத்திற்கு பேச்சு வரவில்லை சரியாக. அவள் மீண்டும் அலகு குத்தி காவடி சுமந்து தீக்குண்டம் இறங்கியேற அவர் தன் எட்டாம் வயதில் திருவாய்மலர்ந்தார். அவர் விண்ணப்பித்த எல்லா பணியிடங்களும் அதற்கு முந்தைய நாளில் நிரப்பப்பட்டிருந்தன. "பத்துநாட்களுக்கு முன்னால் சொல்லியிருக்ககூடாதா" என்று அவர் காதலி அழுது வடிந்தாள். அவர் அத்தனை நாளும் அவளைப் பற்றிய ஒரு காவிய முயற்சியில் மூழ்கியிருந்தார். 33 மூன்றாம் வயதில் திருமணம் முடிந்த அவருக்கு 5 வருடங்கள் கழித்து அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இப்போது நரை முற்றி உடல் உளுத்து துள்ளிதுள்ளி இருமும் அவருக்கு ஒரு சாவுவந்து தொலையமாட்டேன் என்கிறது. இந்த நகரத்தின் எல்லா மருத்துவமனைகளிலும் அவர் உடல் பரிசோதுக்கப்பட்டு குறிப்பெழுதப்பட்டு விட்டது. இந்த புதிய மருத்துவமனியின் புதிய மருத்துவர் புதியதொருகுறிப்பிற்காய் பெயரை வினவிய போது அவர...

ஒப்பிலாமணியே போற்றி

ஒப்பிலாமணிப் புலவரின் இரண்டு பாடல்கள் [ காதல் நோய் வருத்தி இரவு நீள, இரவி தோன்றி விடியாததை எண்ணிச் சினந்து தலைவி தோழிக்கு உரைத்தது..] 1. ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ ? யான் வளர்த்த கோழி வாய் மண்கூறு கொண்டதோ- ஊழி திரண்டதோ கங்குல் தினகரனும் தேரும் உருண்டதோ பாதாளத்துள். [ தேர்- சூரியத்தேர்] [ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ- கடல் போல் கொந்தளிக்கிற இரவாம்] 2. அரவங் கரந்ததோ! அச்சுமரம் இற்றுப் புரவி கயிறுருவிப் போச்சோ! இரவி தான் செத்தானோ இல்லையோ! தீவினையோ! பாங்கி எனக்கு எத்தால் விடியும் இரா.

ஸ்கூட்டிகள் மிதக்கும் கனா

1. அவன் கனவில் ஸ்கூட்டிகள் மிதக்கின்றன. வெள்ளை, கருப்பு. அரக்கு, சில்வர் என வகைவகையானவை. எல்லாமும் முடுக்கப்பட்டு குறுக்கும் நெடுக்குமாக ஓடத் துவங்குகின்றன. ஒரு கம்பிக்கருவி எண்ணற்றவிரல்களால் ஒரே சமயத்தில் கண்டமேனிக்கு சுண்டப்படுகிறது. விறைத்து அதிரும் அதன் உடல் தாள மாட்டாது ஒருக்களித்து சாய்கிறது. ஸ்கூட்டிகள் மெல்ல மெல்ல வேகமாகி காற்றில் ஒரு காற்றாகும் தருணத்தில் துள்ளிக் குதிக்கிறது துளி வெண்மீன். 2. இன்று செய்தித் தாள் பார்த்தீர்களா? நின்று கொண்டிருக்கும் ஸ்கூட்டியின் மேல் படுத்துக்கொண்டு அதை வெறி கொண்டு முத்தமிட்டுக்கொண்டிருக்கும் மனநோயாளியின் புகைப்படமொன்று அதில் வந்துள்ளது. 3. இந்த நகரத்தில் ஸ்கூட்டிகளுக்கு பாதுகாப்பில்லை. நிறுத்திவிட்டு எங்கேயும் செல்லமுடிவதில்லை. திரும்பி வந்து பார்த்தால் சீட் கவரில் விந்துத் திட்டுக்கள். 4. அவனிடம் திடமான கொள்கைகள் இருக்கின்றன. மகத்தான லட்சியங்கள் இருக்கின்றன. அதை வலியுறுத்த அவனிடம் எண்ணற்ற புத்தகங்களும...

உப்புபுளிமிளகாயார்

உப்புபுளிமிளகாய் மறுக்கப்படுவதாக தீர்ப்பு சொன்ன நாளில் அவன் கவிச்செருக்கில் ஓங்கரித்தான். தான் உப்பென்றெழுத உப்பாகும் என்று கூவினான். ஆனால் அப்படியெதுவும் ஆகவில்லை. நான் ஒரு மோசமான கவியா என்று வானத்தை நோக்கிக் கத்தினான். உடைந்து உடைந்து அழுதான். உப்புபுளிமிளகாய், உப்புபுளிமிள்காய் என்று உளறி உளறி பித்தானான் காடுகரைகளில், தோட்டவயல்களில், வீட்டுச்சுவர்களில்,வனத்து மரங்களில் கோவில்பிரகாரங்களில், நடைபாதைவழிகளில், ஆற்றில், குளத்தில் ஊருணி நீரில் எங்கும் எப்போதும் ஒரு கிறுக்கு ஓவியனைப் போல உப்புபுளிமிளகாய் என்று எழுதிக்கொண்டிருந்தான். கடைசியில் கலைவாணி கண் திறந்தாள். அவன் உப்பென்றெழுதியததெல்லாம் உப்பாகி ஊர் உப்புபுளிமிளகாய்க்குள் மூழ்கியது. ... அவன் பித்தாகி அலைந்த காலங்களில் எழுதிய 400 பாடல்கள் கி.பி.6 ம் நூற்றாண்டில் பூவூர்கிழார் என்பவரால் "அறநானூறு" என்கிற பெயரில் தொகுக்கப்பட்டது. கவிஞரின் பெயர் பற்றிய குழப்பங்கள் நிலவியதால் எழுதியவ...